|
இறைவா நீ அருள் புரிவாய்
நிறைவாய் எமக்கீந்தருள்வாய்
கரமேந்தும் உன்னடியான்
குறை தீர்த்தே அருள் புரிவாய்
நாயனே உன்னேவல் பேணி நான் நடந்திப்பூவிலே
நீயுகந்த நல்லடியார் குழுவிலே ஒன்றாகியே
நாளைஅந்தநாளிலே பரிவோடு எனைநீ நோக்கவே
நாயனே நாயனே நான் மன்றாடுகின்றேன் தூயனே!
பாவமென்னும சேற்றிலே நான் வீழ்ந்து மூழ்கிடாமலே
பண்புயர்ந்த முன்னவர் எழிலான பாதை ஏகியே
பாசநபிகள் நாதரின் கரம் கோர்த்து சுவனம் சேரவே
நாயனே நாயனே நான் மன்றாடுகின்றேன் தூயனே!
சோதனைகள் ஆயிரம் எனை சூழ்ந்து வதைத்த போதிலும்
சாந்தி நல்கும் உன்கருணை பார்வை ஒன்றே போதுமே
சிந்தையில் என்நெஞ்சினில் உன் நினைவே மலரச் செய்குவாய்
நாயனே நாயனே நான் மன்றாடுகின்றேன் தூயனே!
|
|
Important Notice:
Mediaislam.com is mainly optimized for Mozilla Firefox Browser.
Please click the button below to download & install it.
It's free, fast and simple to use.
You need real player software to play the media files.
Please click the image to download the free player
|
|