|
(மௌலாய)
1.எல்லாம் படைத்தவனாம்
எல்லோர்க்கும் காவலனாம்
அல்லாஹ் நன்கொடையாய்
அளித்த ரமலான் மாதம்
2. அத்தனை நபிகளுக்கும்
அருமை மிகு நற்றலைவர்
புத்தொளியைத் தந்த ரஸூல்
போற்றும் ரமலான் மாதம்
3. வேதத் திருகுர்ஆனை
வையத்தில் தந்துதவும
மாதத்திலெல்லாம் சிறந்த
மாதம் ரமலான் மாதம்
4. மான்pலத்து மாந்தரெல்லாம்
ஈருலக சீர் பெறவே
வானோர் இறைவனிடம்
வேண்டும் ரமலான் மாதம்
5. ரஜபுனில் துளிராகி
ஷஅபானில் அரும்பாகி
ரமலானில் மலரெனவே
மலாந்த ரமலான் மாதம்
6. சந்திரனும் சூரியனும்
விண்மீன் பறவைகளும்
சிந்தை உருக தவம்
செய்யும் ரமலான் மாதம்
7. ஷைத்தானை சிறையிலிட்டும்
செயல் மறந்தோர் நெஞ்சங்களில்
வைத்தியம் புரிந்த உண்மை
விளங்கும் ரமலான் மாதம்
8. நரகமதை மூடி விட்டு
நற்சொர்க்க வாசல்களை
திறந்து வைத்து சொற் பிறை போல்
பிறந்த ரமலான் மாதம்
9. பண்பும் மன அடக்கம்
மற்றும் பல நன்மை தரும்
நோன்பை நமக்களித்த
மேன்மை ரமலான் மாதம்
10. ஈகை குணங்களையும்
இலகும் அன்பு நெஞ்சினையும்
வாகாய் வழி முறையும்
வழங்கும் ரமலான் மாதம்
11. தொழுகையிலோர் மோகத்தையும்
திடமான தேகத்தையும்
ஒழுகும் உயர் யூகத்தையும்
வளர்க்கும் ரமலான் மாதம்
12. சொல்லுதர்கு ஒண்ணாது
சேர்த்து வைத்த பாவங்களை
நெல்லில் பதரெனவே
நீக்கும் ரமலான் மாதம்
13. செய்த பிழை அத்தனையும்
சொல்லி அழுதழுது
கையிரண்டை ஏந்த நன்மை
கனியும் ரமலான் மாதம்
14. பொய்யும் புறங்கோளும்
பொல்லாத வஞ்சகமும்
செய்யும் மனதை சுத்தம்
செய்யும் ரமலான் மாதம்
15. வாழ்நாளை வீணாக
வருந்தியது போதாதா
தீனோரே தவ்பா செய்வீர்
தருணம் ரமலான் மாதம்
16. ரமலானே! ரமலானே! முஃமீன்
எங்கள் பிழை பொறுக்க
மேலாம் இறைவனிடம்
மன்றாடு ரமலானே!
17. காதிரிய்யா மதுரஸாவில்
கல்வி பெரும் பாலர்களும்
காரி அப்துல் ஹமீதும்
போற்றும் ரமலான் மாதம்
|
|
Important Notice:
Mediaislam.com is mainly optimized for Mozilla Firefox Browser.
Please click the button below to download & install it.
It's free, fast and simple to use.
You need real player software to play the media files.
Please click the image to download the free player
|
|