|
உன்ஸத்திலாக்கி வஹ்ஷத்தை போக்கி
உல்ஃபத்தில் எம்மை அணைக்கனும் அல்லாஹ்
பலாய்கள் என் வாழ்வில் அனுகாமல் காத்து
பாக்கியாய் என்னுள்ளே மிளிரனும் அல்லாஹ்
தவ்பாவை ஏற்று ஹவ்பாவை போக்கி
தன்னை அறிந்திட செய்யனும் அல்லாஹ்
தவ்பென்னும் தூய ஆடை உடுத்தி
தவாபான அமல் செய்ய அருளனும் அல்லாஹ்
ஜமாலிய்யத்தளவில் ஜம்மாக்கி எம்மை
ஜகமீதில் மின்னா சொரியனும் அல்லாஹ்
ஹக்கை ஹல்கினில் ஹக்காக கண்டு
ஷக்கின்றி தவ்கினை அன்இம் யா அல்லாஹ்
ஹைருர் ரஸூலான உன் தூதர் தாஹா
கண்டிரா பொழுதில்லா ஆக்கனும் அல்லாஹ்
தைனில்லா வாழ்வை துன்யாவில் தந்து
ஐனுக்குள் தவ்கினை பொழியனும் அல்லாஹ்
தில்லத்தை விரட்டி தீன் தீன் நபியின்
திம்மத்தில் பிசகாது காக்கணும் அல்லாஹ்
ரஹ்மத்தால் ரப்பே உன்னளவில் அண்மித்து
ரஹ்மானே இரட்சித்து காக்கனும் அல்லாஹ்
ஜாஹிதீன் கூட்டத்தில் இணைத்தெம்மை நாளும்
ஜல்லத்தை விட்டும் மாற்றனும் அல்லாஹ்
சிர்ருக்குள் சிர்ரான விர்ரை அறிந்து
சிதறிடாதெம்மை சேர்க்கனும் அல்லாஹ்
ஷஹ்வத்தை போக்கி ஸஆதத்தை ஊட்டி
ஷராபன் தஹூராவை புகட்டனும் அல்லாஹ்
சித்கான நெறியில் சிதறாது எம்மை
சித்தீக்கீன் கூட்டத்தில் சேர்க்கனும் அல்லாஹ்
ழலாலத்தை விட்டும் காத்தெம்மை நாளும்
ழியாவினை கல்பினில் ஊட்டனும் அல்லாஹ்
தஹ்ஹிரன் கல்பன் அம்மன் ஸிவாக
நெஞ்சத்தில் நிம்மதி சேர்க்கனும் அல்லாஹ்
லுத்மத்தை நெஞ்சத்தில் நின்றுமே போக்கி
மஹ்ஷரின் ழில்லினில் ஒதுக்கனும் அல்லாஹ்
ஐனைக்குள் ஐனான அஹ்மது தாஹா
அவர் நெறி மீதினில் செலுத்தனும் அல்லாஹ்
ஙமாமென்னும் மேகக் குடை பெற்ற மேதை
ஙனியே உன் தூதர் நெறி சேர்க்கனும் அல்லாஹ்
ஃபஹ்மென்னும் ஞான சுடர் தந்த சீமான்
ஃபஹீமவர் பூங்காவில் பூக்கனும் அல்லாஹ்
கவ்லும் ஃபிஆலுமாய் உன்னை துதித்து
கவிய்யே உன் கரீபினில் அன்மனும் அல்லாஹ்
கிபாயத்தென்னும் போதுமை பெற்று
கஷ்ஃபினை வாழ்வினில் ருசிக்கனும் அல்லாஹ்
லிவர்வுல் ஹம்தென்னும் கொடி தன்னில் நின்றே
கொடுமைகள் அனுகாமல் ஆக்கனும் அல்லாஹ்
மீமில் மிளிர்ந்திடும் ஹாமீம் காஸீம்
தாஸீம் நபி வாசம் நுகரனும் அல்லாஹ்
நூரு முஹம்மது ஹக்கு ரஸூலை
தன்னிலே கண்டு மகிழனும் அல்லாஹ்
விலாயத்தென்னும் வலித்துவம் பெற்று
வலிமார்கள் கூட்டத்தில் ஆ;க்கனும் அல்லாஹ்
ஹாதியாய் மேதினியோர்க்கருள்வோனே!
ராஷிதீன்களில் எம்மை பதியனும் அல்லாஹ்
யாஸீனே! யாவருக்கும் அருளும் ரஹீமே!
ஏந்திய கரத்தினை ஏற்கனும் அல்லாஹ்
|
|
Important Notice:
Mediaislam.com is mainly optimized for Mozilla Firefox Browser.
Please click the button below to download & install it.
It's free, fast and simple to use.
You need real player software to play the media files.
Please click the image to download the free player
|
|